""தெருவில் நடக்கும் அநீதியைப் பார்த்து சும்மா இருக்கக் கூடாது. சும்மா இருந்தால் பிணத்துக்குச் சமம் என்று தனது பிறந்தநாள் விழா, தான் ஹீரோவாக நடித்த "இரும்புத்திரை' படத்தின் 100-ஆவது நாள் விழாவில் பேசிய நடிகர் விஷால், சும்மா இருக்காமல் "மக்கள் நல இயக்கம்' என்ற அமைப்பைத் தொடங்கியிருக்கிறார்.

Advertisment

vishalநடிகர் சங்கத்தின் செயலாளர்'', தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என இரட்டைக் குதிரையில் சவாரி செய்யும் விஷால், அரசியல் கட்சித் தலைவராகவும் ஆகிவிட்டார். திடீரென அரசியல் களத்தில் விஷால் குதித்ததன் பின்னணி குறித்து சினிமா ஏரியாவில் விசாரித்தோம்.

""தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக விஷால் ஆனவுடன் சின்னத் தயாரிப்பாளர்கள் செழிப்பாக வாழ ஏற்பாடு செய்வேன்னு சொன்னார். ஆனால் இதுவரை எத்தனை பேர் செழிப்பாக வாழ்ந்தார்கள்னு தெரியல. சங்கத்தின் நிதியாக இருந்த ஏழரை கோடி ரூபாய், ரெண்டு கோடி ரூபாயாக ஆனதுதான் மிச்சம். நலிலிந்த தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியமும் கட். தனக்கு எதிராக ஒரு விஷயம் வெடித்தால், அதை டைவர்ட் பண்ணுவதற்காக ஸ்டண்ட் அடிப்பது விஷாலிலின் பழக்கம். அந்தப் பழக்கத்தில்தான் "மக்கள் நல இயக்க'த்தை ஸ்டார்ட் பண்ணிருக்காரு'' என்கிறார் ஒரு தயாரிப்பாளர்.

"இரும்புத்திரை' படத்தை ரிலீஸ் பண்ணுவதற்குமுன்பு பல கோடி ரூபாய் கடன் பிரச்சினையில் சிக்கித் தவித்தார் விஷால். சிலபேருக்கு செட்டில் பண்ணினால்தான் படத்தை ரிலீஸ் செய்யமுடியும் என்ற நிலைமை. அப்போது கைகொடுத்தவர் பிரபல ஃபைனான்சியரான மதுரை அன்பு.

Advertisment

அதனால்தான் நடிகரும் டைரக்டருமான சசிகுமாரின் மைத்துனர் தற்கொலை வழக்கில் மதுரை அன்பு.

தேடப்பட்டுவந்த நேரத்தில், "எந்த அமைச்சர் வீட்டுக்குள் அன்பு இருந்தாலும், அந்த அமைச்சர் வீட்டை முற்றுகையிடுவேன்' என வீராவேசமாகப் பேசினாலும் "இரும்புத்திரை'-யின் ஆடியோ விழாவில், அன்புவின் தம்பி அழகரை தனது அருகில் அமர வைத்தார் விஷால்.

vishal

Advertisment

ஆனால் இப்போதோ டி.டி.வி. தினகரனின் அருளாசியால் அத்தனை கடன்களையும் விஷால் அடைத்துவிட்டதாக ஒரு தரப்பும், இல்லையில்லை இன்னும் ஏகப்பட்ட கடன் நொம்பலத்தில் இருக்கிறார் என மற்றொரு தரப்பும் சொல்கிறது. தினகரனுக்கு விஷால்மேல் இவ்வளவு அக்கறை ஏன் என விநியோகஸ்தர் ஒருவர் விளக்கமாகச் சொன்னார்.

""இடைத் தேர்தலிலில் வேண்டுமானால் தினகரன் தனது பலத்தைக் காட்டி களத்தில் இறங்கலாம். ஆனால் பொதுத்தேர்தலிலோ, ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் சரிக்குச் சமமாக மோதும்.

அப்போது பிரபலமான சினிமா முகம் இருந்தால் கொஞ்சம் சமாளிக்கலாம் என்ற ஐடியாவில்தான் விஷால்மீது கரிசனம் காட்டுகிறார் தினகரன். சமீபத்துல தனக்கு நெருக்கமான ஒருவரிடம் கமல் பேசியபோது, "கட்சி ஆரம்பிச்சு இத்தனை மாசம் ஆச்சு. தொழிலதிபர்கள் யாரும் நிதி தர்றமாதிரி தெரியலையே' என சோர்வாக பேசிருக்காரு. தானும் கட்சி ஆரம்பிச்சா நிதியைக் கொண்டுவந்து கொட்டுவாங்கன்னு நினைக்குறாரு விஷால். 3,000 ஓட்டுக்கள் இருக்கும் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வேறு, மக்கள் ஓட்டுப்போடும் தேர்தல் வேறு. இந்த உண்மை விஷாலுக்குத் தெரியுமான்னு தெரியல'' என்றார்.

தற்போது அரசியல் கட்சி நடத்திக்கொண்டிருக்கும் நடிகர் ஒருவருக்கு மாதந்தோறும் நிதி உதவி செய்கிறார் மதுரை அன்பு. இப்போது விஷாலுக்கு கைகொடுப்பதும் மதுரை அன்புதான்.